தல அஜித்தின் 59 வது படம் அதாவது பிங்க் ரீமேக் படம் தற்போது வரை 30 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டதாம். ஆனால் தற்போது தான் தல அஜித் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத்திற்கு சென்றுள்ளார்.அப்போது விமான நிலையத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் வைரலானது.
Ajith
மேலும் இன்றிலிருந்து இதன் படப்பிடிப்பில் தல கலந்துகொள்வாராம். இவருக்கு மூன்று நான்கு வாரங்கள் தான் கால்ஷீட் கொடுத்துள்ளார்களாம். ஆகையால் கூடிய விரைவிலேயே இந்த படத்தை முடித்து விட்டு. தனது 60வது படத்தின் படப்பிடிப்பை துவங்க தலையும் வினோத்தும் இந்த படத்தை முடித்துவிட்டு தயாராக இருக்கிறார்கள். இந்த படத்தையும் போனிகபூர் தான் தயாரிக்கிறார்.
இந்த படம் வினோத்தின் சொந்த கதையாம். மேலும் பிரமாண்ட பட்ஜெட்டில் இப்படத்தை தயார் செய்ய போவதாகவும் பேச்சு அடிபட்டு வருகிறது. இந்த படத்தின் அறிவிப்பு இன்னும் இரண்டு மூன்று மாதங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை அடுத்த ஆண்டு ரிலீஸ் செய்ய படக்குழு பிளான் போட்டு வைத்துள்ளார்கள்.
Post a Comment