சிம்பு, சுந்தர் C கூட்டணியில் உருவாகியுள்ள 'வந்தா ராஜாவாதான் வருவேன்' திரைப்படம் உலகம் முழுவதும் இன்று ரிலீஸ் ஆகியுள்ளது. உடன் G.V. பிரகாஷின் சர்வம் தாளமயம் திரைப்படமும் இன்று ரிலீஸ் ஆகி இருக்கிறது.
இதனால், பொங்கல் ஸ்பெஷலாக வெளியான, விஸ்வாசம், பேட்ட ஆகிய திரைப்படங்களின் திரையரங்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
இதனால், பொங்கல் ஸ்பெஷலாக வெளியான, விஸ்வாசம், பேட்ட ஆகிய திரைப்படங்களின் திரையரங்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.
என்றாலும் பேட்டையா, விஸ்வாசமா என்ற கேள்வி எழும் போது, பெரும்பாலான திரையரங்குகள், தலைவரின் பேட்டையை தேர்வு செய்து அதற்கு பதிலாக புது வரவான திரைப்படங்களை திரையிட்டு வருகிறது.
உதாரணமாக பாண்டிச்சேரியில் உள்ள, ராஜா, ரத்னா, பாலாஜி ஆகிய திரையரங்குகளில் ஓடிவந்த பேட்ட திரைப்படம், நீக்கப்பட்டு சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் திரைப்படம் திரையிடப்பட்டு உள்ளது.
அதே நேரம் குறிப்பிட்ட திரையரங்குகளில், அஜித்தின் விஸ்வாசம் திரைப்படம் நான்குவாரங்களை கடந்தும் தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது. இதற்கு, குடும்பங்களை கவர்ந்த ஒன்றாக விஸ்வாசம் அமைந்துவிட்டதே காரணம் என்கிறனர் தியேட்டர் நிர்வாகத்தினர்.
Post a Comment