அஜித்தின் விஸ்வாசம் ரசிகர்கள் மத்தியில் பயங்கர எதிர்ப்பார்ப்பில் வெளியானது. பொங்கல் ரிலீஸாக 'விஸ்வாசம்' முதலில் அறிவிக்கப்பட்டாலும், திடீரென படப்பிடிப்பை முடித்துவிட்டு போட்டிக்கு வாத்து நின்றது ரஜினியின் பேட்ட. ஒரே நேரத்தில் இரு படங்களின் வெளியீட்டால் வசூலில் பாதிப்பு ஏற்படக்கூடும் என சொல்லப்பட்டது.
ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது போலவே 'விஸ்வாசம்' படமும் அமைந்தது. இருபடங்களும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை ஈட்டியுள்ளன. சர்வதேச பாக்ஸ் ஆபிஸில் 'பேட்ட' படம் நல்ல வசூல் செய்துள்ளது. பல்வேறு நாடுகளில் ரஜினிக்கு இருக்கும் மார்க்கெட்டால் இது சாத்தியமானது.
ஆனாலும், தமிழகத்தைப் பொறுத்தவரை தொடர்ந்து 'விஸ்வாசம்' படம் வசூலில் முன்னணியில் இருந்து வருகிறது. 'பேட்ட' படத்தை பின்னுக்கு தள்ளிய நிலையில், தற்போது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான '2.0' படத்தின் வாழ்நாள் வசூலை தமிழகத்தில் முறியடித்துள்ளது.
தமிழகத்தில் ரூ 130 கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது, இந்நிலையில் 'விஸ்வாசம்' தமிழக அளவில் விஜய்யின் 'மெர்சல்' பட வசூலை முறியடித்துவிட்டது. அது மட்டுமின்றி சென்னை பாக்ஸ் ஆபிஸில் நேற்றோடு 'மெர்சல்' வசூலை 'விஸ்வாசம்' படம் பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது.
Post a Comment