அஜித் எப்போதும் தன்னை தாண்டி மற்றவர்கள் பற்றியும் யோசிக்க கூடியவர். சுற்றியுள்ளவர்களுக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்று கேள்விபட்டால் உடனே யாருக்கும் தெரிய வேண்டாம் என்று கூறி உதவ கூடியவர்.
இவர் இப்போது விஸ்வாசம் படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்தில் 59வது படத்தில் நடித்து வருகிறார். படத்திற்கான ஷுட்டிங் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது.
அங்கு மோகன்லால்-பிரியதர்ஷன் படமும், பிரபாஸின் புதிய படங்களின் படப்பிடிப்பும் நடக்கிறது. இதனை அரிந்த அஜித் மூவரையும் நேரில் சந்தித்து அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்ததோடு அவர்களுடன் சில மணி நேரம் பேசியுள்ளார்.
ஒரே வாரத்தில் மூன்று பிரபலங்களை சந்தித்து அஜித் பேசியிருப்பது ஒரு நல்ல விஷயம் தான்.
Post a Comment