HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 12 February 2019

அஜீத்தின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விரைவில் - எப்போது தெரியுமா?

அஜித் நடிப்பில் தற்போது வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விஸ்வாசம் திரைப்படம் உலக அளவில் 200 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது. அஜித் தற்போது சென்னையில் உள்ள ரைபில் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார், மேலும் அவர் தனது அடுத்த படத்தில் நடிக்கவும் தயாராகி வருகிறார்.
Third party image reference
அஜித்தின் அடுத்த படத்தை சதுரங்க வேட்டை மற்றும் தீரன் அதிகாரம் ஒன்று ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்குகிறார். இந்த படத்தை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை வித்யா பாலன் நடிக்கிறார், மேலும் படத்தில் ஸ்ரதா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் போன்ற முக்கிய நடிகர்கள் நடிக்கின்றனர். இந்தப் படம் பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த பிங்க் படத்தின் ரீமேக் ஆகும்
Third party image reference
வினோத் ஏற்கெனவே படப்பிடிப்பை தொடங்கி விட்டார் மற்ற நடிகருக்கான படப்பிடிப்பு நடந்து வருகிறது. அஜித் விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளார் இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இம்மாதம் இறுதிக்குள் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன, மேலும் அஜித் கடந்த டிசம்பர் மாதம் இந்த படத்திற்கான போட்டோ ஷூட்டில் கலந்து கொண்டுள்ளார் என்ற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது. மேலும் படம் வரும் மே மாதம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com