இன்று முதல் தமிழ் சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகின்றன. இதனை கடந்த சில தினங்களுக்கு முன்பு தயாரிப்பளார் சங்கம் அறிக்கை மூலமாக வெளியிட்டது. க்யூப் உள்ளிட்ட டிஜிட்டல் சேவை வழங்கும் நிறுவங்களின் சர்வீஸ் சார்ஜ் அதிகம் எனவும் இது சினிமா தயாரிப்பாளர்களுக்கு மிகப்பெரிய கஷ்டமான விஷயம் எனவும் இதனால் இந்த கட்டணங்களை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இணையாக போராட்டத்தில் குதித்துள்ளன.
கடந்த 1-ம் தேதி முதல் எந்த தமிழ்ப்படமும் ரிலீசாகவில்லை. இந்நிலையில், விஸ்வாசம் படத்தின் தயாரிப்பளார் தயாரிப்பாளர் சங்கத்திற்கு சிறப்பு அனுமதி கேட்டு விண்ணப்பம் செய்திருக்கிறார். படத்திற்க்கான செட் போடப்பட்டுவிட்டது. படப்பிடிப்பு நடக்காத பட்சத்தில் பல கோடி இழப்பு ஏற்படும் என கூறி விஸ்வாசம் படத்தின் படப்பிடிப்பை மட்டும் நடத்திக்கொள்ள அனுமதி வழங்குமாறு கோரிக்கை வைத்துள்ளார் சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனர் திரு.டி.தியாகராஜன். ஆனால், தயாரிப்பாளர் சங்கம் அனுமதி வழங்க மறுத்துவிட்டது.
இந்த விஷயத்தை அறிந்த அஜித்குமார், திரையுலகின் நன்மைக்காக நடக்கும் போராட்டத்தில் நாம் மட்டும் ஏன் விலகி நிற்கவேண்டும். சங்கத்தின் முன்னாள் தலைவரான நீங்களே இப்படி செய்யலாமா..? விசுவாசம் படத்திற்கு மட்டும் படப்பிடிப்பு நடத்தசிறப்பு அனுமதி கேட்டது சரி கிடையாது. எல்லாம் சரியானதுமே நாம் படப்பிடிப்புக்குப் போகலாம் என்று கறாராக கூறியுள்ளார்.
அஜித்தின் இந்த அணுகுமுறையை கண்டு விழி பிதுங்கி நிற்கிறது திரையுலகம்.
Post a Comment