ஹட்ரோகார்பன் மீத்தேன்
பூமிக்கு அடியிலிருந்து எவ்வளவு
எடுக்கப்படுகிறதோ அதே அளவு
தண்ணீர் செலுத்தி சமன் செய்வர்.
ஏனென்றால் பூமிக்கடியில் உண்டாகும் வெற்றிடத்தால் நிலநடுக்கம் உண்டாகும்.
அதை தவிர்க்கவும்....
பூமிக்கடியில் அதே அழுத்தம் கொண்டு அதிகமாக உற்பத்தி செய்யவும்.....
இதில் மிகப்பெரிய ஆபத்து வெற்றிடத்தால் நிலநடுக்கம் ஏற்படுவதுதான்....
வெற்றிடத்தைப் நிரப்ப தண்ணீர்க்கு என்ன செய்வார்கள் ..?
அதனாலே மற்ற நாடுகளில் நிலத்தில் இந்த திட்டங்களை செயல்படுத்த தடை உள்ளது.
அதிகமாக கடலில் எடுக்கப்படுகிறது....
கடலில் எடுக்க செலவு அதிகம்தான்.
ஆனாலும் வரும் ஆபத்தை உணர்ந்து கடலில் இன்று அதிகமாக செயல்படுத்தப்படுகிறது.
உங்களுக்கு இதன்மேல் அக்கறை இல்லையென்றாலும்....
இதில் அதிகமாக வருமானம் வரும் அதில் நீங்கள் அரேபிய சேட்டாகலாம் என்று கனவு காணவேண்டாம்....!
ஏனென்றால் ...
இன்று உலக சந்தையில் இதன் விலை நிர்ணயம் எப்படி நிர்ணயிக்கப்படுகிறதோ..
அதே விலைதான்
இந்தியாவில் எடுப்பதற்கும் சர்வதேச விலையை இந்த கார்பரேட்
நிறுவனங்கள் வழங்கும்.....
இதில் நமக்கு லாபம் இல்லை அந்த முதலாளிகளை தவிர....
அதேபோல நம் தமிழகத்திற்கு வெறும் 10% லாபம்தான் கிடைக்கும்...
கூடன்குளம்போல் மற்ற மாநிலத்தவர்கள்தான் அதிகமாக வேலை செய்யப்போகிறார்கள்...
அடுத்த சந்ததியைபற்றி கவலை இல்லாத கார்பரேட் கைகூலிகளான அரசியல் வியாதிகளுக்கு மக்களை பற்றி துளியும அக்கறை இல்லை...
அவர்களின் எண்ணம் பணம் சம்பாதிப்பதுதான்.... GDP அதிகரிக்க வேண்டும்....
இயற்கையைப்பற்றி துளியும் கவலை இல்லை..
விவசாயத்தை அழித்து எளிதாக குறைந்த செலவில் எடுத்து அதிக லாபம் ஒருசிலர் மட்டுமே பெற இந்த பணம்திண்ணி அரசியல் வியாதிகள் மும்முரமாக உள்ளது...
தமிழ்நாட்டில் குறைந்தது 500000 (ஐந்து லட்சம்)ற்கும் அதிகமாக விவசாயிகள் பயனடையும் விவசாய நிலத்தில்....
வெரும் ஒரு தனியார் முதலாளி
அதில் வேலை செய்யும் 5000 பேர் மட்டுமே பயனடைவர்......
அரசு என்பது ஒருவன் சம்பாதித்து வாழ மட்டுமல்ல எல்லோருக்கும் சமமாக பகிர்ந்தளிக்க செயல்படுவதுதான்...
அடுத்த சந்தியை பற்றி அக்கறை இல்லாது போனது ஏனோ...?
இதற்காக போராடுபவர்கள் தீவிரவாதிகள் துரோகிகள் அந்நிய மதத்தவன் என பல கோணங்களில் திசை திருப்பிவிட்டுள்ளார்கள்.....
கூடன்குளத்திலும் இதேபோல்தான் மதத்தால் சூழ்ச்சி செய்து செயல்படுத்தியது கார்பரேட்களின் உதவியோடு....
சிந்தியுங்கள் ஒன்றிணையுங்கள்....
இதுவெல்லாம் பெரிய தகவலாக தெரியாது.....
ஏனென்றால்....
கியாஸ் விலை, பெட்ரோல் டீசல் விலை உயர்வுக்கு எப்படி நம்மால் எதிர்ப்பு தெரிவிக்க முடியலையோ அதேபோல்....
நம்மை மதம் மொழி என திசை திரும்பிவிட்டுவிட்டார்கள்.....
காவேரி தண்ணீர் இல்லாமல்
தடுப்பணைகள் கட்ட வாக்கரிசி இல்லாத தமிழ்நாட்டு கூமுட்டை அரசியல் அடிமைகள் இருக்கும்வரை நாம் இப்படி பல அறிக்கைகள் விட்டுக்கொண்டு தான் இருக்கப்போகிறோமோ.....
விழித்தெழுவோம்....
நமது மாநிலத்தின் வருமானத்தில் வட மாநில வளர்ச்சி திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.....
அதை சாதனையாக படம்பிடித்து காண்பிக்கின்றனர்.....
இங்கே மனிதம் மதிக்கப்படுவதில்லை....
உண்மை சொல்பவன் தேச துரோகி அந்நியன்.......
#Tamilan
Post a Comment