HEADER

... (several lines of customized programming code appear here)

Saturday, 31 March 2018

தினமலரில் யுவன் சங்கர் ராஜாவின் சமீபத்திய பேட்டி!.



 நான் ஏன் முஸ்லிமாக மாறினேன் என்பதற்கு யுவன் இப்போது விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது: எனக்கு என்னோட அம்மான்னா உயிர். என்னோட கஷ்டங்களில் கூட இருந்தவங்க. தன்னந்தனி தூணாக இருந்து எங்க குடும்பத்தை காப்பாத்தினவங்க. அவங்களோட இழப்பு என்னை மாத்திடுச்சு. ஒரு வேலையாக மும்பை போய்விட்டு திரும்பியபோது அம்மா மரணப்படுக்கையில இருந்தாங்க. நானும், தங்கையும் அவர்களை ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போனோம். போற வழியில அம்மா என் கையை இருக்கமா பிடிச்சிருந்தாங்க. திடீர்னு கை நழுவி விழுந்தது. அம்மா எங்களை விட்டு போயிட்டாங்க. ஒரு வினாடிக்கு முன்பு அவருக்குள்ள இருந்த ஜீவன் இப்போ எங்க போச்சுன்னு எனக்குள்ள கேக்க ஆரம்பிச்சேன். அதுக்கான விடை கிடைக்கல.

அம்மாவோட பிரிவு என்னை தனிமைப்படுத்திடுச்சு. ரொம்ப கவலையில இருந்த நேரம் ஒரு முஸ்லிம் நண்பர் மெக்கா போய்விட்டு திரும்பியிருந்தார். அவர் என்னிடம் "யுவன் நீ ரொம்ப கவலையில இருக்கே, தாங்க முடியாத கவலை வரும்போது இந்த முசல்லாவில் (தொழுகைக்கு பயன்படும் தரைவிரிப்பு) கொஞ்ச நேரம் உட்காரு போதும்" என்று கொடுத்துவிட்டுச் சென்றார். எனக்கு நம்பிக்கை இல்லாம அதை மூலையில போட்டேன்.

ஒரு கட்டத்துல அம்மா கவலை ஆட்டிப்படைக்க ஆரம்பிச்சது. மன அழுத்தம் அதிகமாச்சு. அந்த முசல்லா நினைவு வந்து அதன் மீது உட்கார்ந்து "யா அல்லா... என்னோட பாவங்களை மன்னிச்சு, என்னை இந்த கவலையிலிருந்து வெளியில கொண்டு வந்து விடு"ன்னு கத்தி கதறினேன். "வா... இஸ்லாத்துக்கு வந்துவிடு"ன்னு எனக்குள்ள ஒரு உள்ளுணர்வு வந்துச்சு. அது ஒரு அற்புதமான உணர்வு. அதை வார்த்தையில் வெளிப்படுத்த முடியாது.

அன்றிலிருந்து அதாவது 2012ம் ஆண்டிலிருந்து திருக்குரான் மொழிபெயர்ப்புகளை படிக்க ஆரம்பிச்சேன். தொழுகை உள்ளிட்ட வழிபாட்டு முறைகளை கத்துக்க ஆரம்பிச்சேன். 2014 ஜனவரியில் முஸ்லிமாக மாறுவது என்று முடிவு செய்தேன். மரணத்தின் தருவாயில் எங்கம்மா "எனக்கு பிறகு நீ தனிமரமாயிடுவே இஸ்லாம்ங்ற மரத்தின் கீழ் ஒதுங்கிக்கோ"ன்னு எங்கம்மா சொன்னதாவே நான் எடுத்துக்கிட்டேன்.

நான் முஸ்லிமாக மாறியது என் அப்பாவுக்கு பிடிக்கல. என் அண்ணனும் அண்ணியும் என் பக்கம் நின்னாங்க. படங்களில் என் பெயர் யுவன் ஷங்கர் ராஜான்னு வர்றதால இன்னும் பாஸ்போர்ட் உள்ளிட்ட ரிக்கார்டுகளில் பெயரை மாற்றவில்லை. விரைவில் மாற்றுவேன். என்றார் யுவன்.

தினமலர்
12-08-2014

தினமலரில் இந்துத்வவாதிகள் பலர் தங்களின் கோபத்தை கொட்டியிருக்கிறார்கள். இப்படி ஒரு எதிர்ப்பலையை உண்டாக்கவே தினமலர் இந்த பேட்டியை பிரசுரித்துள்ளது. ஆனால் பெரும்பாலான இந்து மக்கள் 'இது அவரது சொந்த விருப்பம். இதில் நாம் தலையிட அவசியம் இல்லை' என்றே நினைக்கின்றனர்.

இத்தனை காலம் மொகலாயர்கள் வன்முறையை காட்டி இந்தியாவில் இஸ்லாத்தை வளர்த்தனர் என்று கூசாது பொய் சொல்லி வந்தனர். இது போன்ற பிரபலங்களின் மாற்றம் இந்த அவதூறுகளுக்கு ஆப்பு வைக்கிறது. தங்களின் பொய் அம்பலமாகிறதே என்ற ஆற்றாமையில் வரும் வெளிப்பாடுகளே இந்துத்துவ வாதிகள் கோபப்படுவது.

யுவன் மிக அழகாக சொல்கிறார். குர்ஆனின் வசனங்களே என்னை இந்த அளவு மாற்றியது என்று. இதுதான் உண்மையும் கூட. முகமது நபியை கொல்ல வாளோடு வந்தவர்தான் உமர். அவரது சகோதரி ஓதிய குர்ஆன் வசனம்தான் அவர் கையில் இருந்த வாளை நழுவ விட்டது. அன்றைய அரபுகள் காதுகளில் பஞ்சை வைத்துக் கொண்டு செல்வார்களாம். குர்ஆனின் வசனம் காதில் விழுந்தால் இஸ்லாத்துக்கு மாறி விடுவோமோ என்ற பயம்தான் அவர்களை பஞ்சை வைத்து அடைத்துக் கொள்ள சொன்னது.

தூதரான முஹம்மதுக்கு அருளப்பட்டதை அவர்கள் செவியுறும் போது உண்மையை அறிந்து கொண்டதால் அவர்களின் கண்களில் கண்ணீர் வடிவதை நீர் காண்பீர். ''எங்கள் இறைவா! நம்பிக்கை கொண்டோம். எனவே எங்களை சான்று கூறுவோருடன் பதிவு செய்வாயாக!'' என அவர்கள் கூறுகின்றனர்.
அல்குர்ஆன் 5 : 83

அவர்கள் ஆதமுடைய வழித் தோன்றல்களிலும், நூஹுடன் நாம் கப்ப­ல் ஏற்றியவர்களிலும், இப்ராஹீம், இஸ்ராயீல் ஆகியோரின் வழித் தோன்றல்களிலும் நாம் நேர்வழி காட்டித் தேர்ந்தெடுத்த நபிமார்களாவர். அவர்கள் மீது அல்லாஹ் அருள் புரிந்தான். அவர்களிடம் அளவற்ற அருளாளனின் வசனங்கள் கூறப்பட்டால் அழுது, சிரம் தாழ்த்தி விழுவார்கள்.
அல்குர்ஆன் 19 : 58

குர்ஆனில் வரும் இந்த வசனங்கள் எந்த அளவு சத்தியமானது என்பதற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு யுவனின் இந்த பேட்டி. 'குர்ஆனை ஓதியவுடன் என் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது. கதறி அழுது இறைவனிடம் மன்னிப்பு கேட்டு சிரம் தாழ்த்தி வீழ்ந்தேன்' என்று அவரது உள்ளத்திலிருந்த வந்த அந்த வார்த்தைகளை குர்ஆனும் அப்படியே கூறுவதைக் கண்டு நாம் ஆச்சரியப்படுகிறோம்.

மேலும் இஸ்லாத்தை ஏற்றதால் இஸ்லாத்துக்கோ முஸ்லிம்களுக்கோ எந்த பெருமையும் இல்லை. மாறாக யுவன் அடிமை சங்கிலியை உடைத்தெறிந்து இறைவனைத் தவிர யாருக்கும் தலை வணங்காத ஒரு உன்னத மார்க்கத்தை பெற்றதனால் அவர் சிறப்படைகிறார்.


About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com