சென்னை: சென்னையில் எம்ஜிஆர் சிலையை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைத்தார். அரசியல் அறிவிக்குப்பின் ரஜினி பங்கேற்கும் முதல் பொது நிகழ்ச்சி இது என்பத குறிப்பிடத்தக்கது. தம்மை வரவேற்க ரசிகர்கள் பேனர்கள் வைக்க கூடாது என்று ரஜினி கூறினார். தாம் அரசியலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தியவர்களில் ஏ.சி சண்முகம் ஒருவர் என்று ரஜினி காந்த் தெரிவித்தார். மேலும் தான் வந்து எம்.ஜி.ஆர்.சிலையைத் திறக்க வேண்டும் என்று பிடிவாதமாக ஏ.சி சண்முகம் இருந்தார். எம்.ஜி.ஆர். திரை உலகத்தை சேர்ந்தவர் என்பதால் தான் அரசியல் பேச வேண்டி உள்ளது. தற்போது எம்.ஜி.ஆரின் அதிமுக ஆட்சி தான் தமிழகத்தில் நடக்கிறது என ரஜினி தெரிவித்தார்.
தனக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள தொடர்பு நிறைய பேருக்கு தெரியாது. தனக்கும் எம்.ஜி.ஆருக்கும் உள்ள தொடர்பு குறித்து நிறைய பேச ஆவலாக உள்ளேன் என அவர் கூறினார். அரசியவாதிகள் தங்களது வேலையை சரியாக செய்யவில்லை என அவர் குற்றம் சாட்டினார். மேலும் கலைஞர், மூப்பனார் போன்றவர்களுடன் பழகி தான் அரசியல் கற்றுக்கொண்டேன். தன்னை யாரும் ரத்தினக் கம்பளம் விரித்து வாழ்த்த வேண்டும் என்று விரும்பவில்லை. தன்னை ஏன் ஏளனம் செய்கிறார்கள் என்று தெரியவில்லை என்று ரஜினி கூறினார். மேலும் தமிழகத்தில் நல்ல தலைவருக்கும், தலைமைக்கும் வெற்றிடம் உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் பேசினார்.
...

Post a Comment