HEADER

... (several lines of customized programming code appear here)

Monday 14 October 2019

படம் ரிலிஸுக்கு முன்பே இயக்குநருக்கு கார் பரிசு கொடுத்த அஜித்!..

Related image


ரசிகர்களால் தல என்று அழைக்கப்படும் அஜித்தை, ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலக பிரபலங்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள். அதற்கு காரணம், அஜித்தின் பனிவும், அவர் மற்றவர்களிடம் பழகும் தன்மையும் தான் என்று கூறப்படுகிறது.
அந்த வகையில், அஜித்தை வைத்து தனது முதல் படத்தை இயக்கிய இயக்குநர் ஒருவர், அவரது பழைய நினைவுகளை சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறி பெருமிதம் கொண்டிருக்கிறார். அதில் முக்கியமாக, அவர் அஜித்தை வைத்து இயக்கிய படம் வெளியாவதற்கு முன்பாகவே அவருக்கு அஜித் கார் ஒன்றை பரிசாக வழங்கினாராம்.

அவர் தான் இயக்குநர் வி.இசட்.துரை. ‘முகவரி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான வி.இசட்.துரை தொடர்ந்து பல படங்களை இயக்கியிருக்கிறார். ஒரு இடைவேளைக்குப் பிறகு இயக்குநர் சுந்தர்.சி-யை ஹீரோவாக வைத்து ‘இருட்டு’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். திகில் படமான இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.


இந்த நிலையில், பேட்டி ஒன்றில் அஜித்துடன் பணியாற்றியது குறித்து பேசியிருக்கும் துரை, “கல்லூரி படிப்பை முடித்துவிட்டு படம் இயக்க வந்த என்னை அஜித், பி.சி.ஸ்ரீராம் போன்ற ஜாம்பவான்கள் தான் மோல் பண்ணினாங்க. என் வேலையை பார்த்துட்டு ‘முகவரி’ படம் ரிலிஸுக்கு முன்னாடியே கார் ஒன்றை அஜித் சார் பரிசாக வழங்கினார்.

அதுமட்டும் இல்லாமல், “நான் டப்பிங் பேசும் போதே, எனது பல படங்க எனக்கு பிடிக்காமல் போயிருக்கிறது. ஆனால், இந்த படம் தான் நான் டப்பிங் பேசும் போதே, பல இடங்களில் என்னை பிரமிக்க வச்சது. அதனால, உங்களுக்கு ஒரு கார் அல்ல பத்து கார்களை பரிசாக கொடுக்கனும்” என்றும் அஜித் என்னை பாராட்டி தோளில் கைபோட்டார். அவர் ரியலி கிரேட்” என்று தெரிவித்துள்ளார்.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com