இந்தியாவின் சுதந்திர போராட்ட வீரர்களில் ஒருவர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி, 1948-ம் ஆண்டு ஜனவரி 30-ம் தேதி கோட்சேவால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
கோட்சே,ஹிந்து மதத்தை சேர்ந்த இவர், RSS இயக்கத்தின் ஒரு உறுப்பினராக இருந்தார்...
சுதந்திர இந்திய வரலாற்றின் மிகப்பெரும் சோகசம்பவமாக அந்த நிகழ்வு கருதப்படுகிறது. காந்தியின் மரணம் குறித்த வரலாறு நாடு முழுவதும் அறியப்பட்டு வருகின்றது.
குஜராத் மாநிலம் காந்தி நகர் பகுதியில் ஷஃபாலம் ஷாலா விகாஷ் சங்குல் என்ற அமைப்பால் நடத்தப்படும் அரசு உதவி பெற்ற தனியார் பள்ளியில் நேற்று பள்ளித் தேர்வு நடைபெற்றுள்ளது.
அந்த தேர்வில் 9-ம் வகுப்பிற்கான கேள்வித்தாளில் ‘காந்தி எப்படி தற்கொலை செய்துகொண்டார்?’ என்ற கேள்வி இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், அதேபள்ளியில் 12-ம் வகுப்பில், ‘உங்கள் பகுதியில் அதிகரிக்கும் மதுவிற்பனையால் தொந்தரவுகள் அதிகரிப்பது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு புகார் கடிதம் எழுதுக?’ என்ற கேள்வியும் இடம்பெற்றுள்ளது.
மாநிலம் முழுவதும் மது விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தக் கேள்வியும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.
Post a Comment