பல வருடம் கழித்து தல அஜித் உடன் இணைகிறாரா ஏ.ஆர். முருகதாஸ்- கிசுகிசுக்கப்படும் தகவல்:-https://youtu.be/lWLgl0EgK1M
தல அஜித் இந்த வருடத்தின் தொடக்கத்தில் விஸ்வாசம் என்ற வெற்றி திரைப்படத்தை கொடுத்தார், இதனை தொடர்ந்து அடுத்ததாக நேர்கொண்டபார்வை திரைப்படத்தை கொடுத்து அதிலும் வெற்றி பெற்றார், அஜித் சில காலமாகவே ஒரே இயக்குனர் திரைப்படத்தில் நடித்து வருகிறார், நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் வினோத் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
இந்த திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்ஷன் கலந்த கதை, கடைசியாக நடித்த இரண்டு திரைப்படங்களும் சென்டிமென்ட் திரைப்படம், அதேபோல் தல60 திரைப்படத்திலும் அப்பா சென்டிமென்ட் இருக்கும் என கூறப்படுகிறது, அதுமட்டுமில்லாமல் அஜித் இந்த திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாகவும் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் தான் போனி கபூரின் மகள் முதல் முறையாக அறிமுகமாக இருக்கிறார்.
அஜித் கருப்புநிற முடியுடன் நடிக்க இருப்பதால் ரசிகர்களிடம் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகிறது, இந்த வருடத்தின் வசூல் மன்னனாக அஜித் இருப்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். என்றால் தொடர்ச்சியாக இரண்டு திரைப்படங்கள் 100 கோடிக்கு மேல் கொடுத்து அசத்தி விட்டார். இந்த நிலையில் தல60 படத்தின் பூஜையில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், இந்த படத்திற்கு வலிமை என்று பெயர் வைக்கப்பட்டுஉள்ளது.



Post a Comment