யஃஜூஜ் மஃஜூஜ்
Part 1
1)அவர்கள் குள்ளமனிதர்கள் இல்லை! குள்ள மனிதர்கள் என்று கூறும் ஹதீஸ் பலகீனமானது அது இதுதான்
(இவர்களின் உயரம் ஒரு சாண், அல்லது இரு சாண் அளவுக்கே இருக்கும். இவர்களில் மிகவும் உயரமானவர் மூன்று சாண் அளவுக்கு இருப்பார்’ என்று இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாக ஹாகிம் நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.)
2) நபி(ஸல்) அவர்கள், 'நற்செய்தி பெற்று மகிழுங்கள்! உங்களில் ஒருவருக்கு யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினரில் ஓராயிரம் பேர் (நரகத்திலிருந்து வெளியேறாமல் அதனுள்) இருப்பார்கள்.
ஸஹீஹ் புகாரி : 3348.
ஸஹீஹ் புகாரி : 3348.
7:38. (அல்லாஹ்) கூறுவான்: “ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தார்களிலிருந்து உங்களுக்கு முன் சென்றவர்களுடன் நீங்களும் (நரக) நெருப்பில் நுழையுங்கள்.”
யஃஜூஜ் மஃஜூஜ் ஜின் இனத்தவர்கள் என்றால் ஜின்னை சுவர் கட்டி தடுக்க முடியாது
18:97. எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்) அதன் மீது ஏறவும் சக்தி பெறவில்லை, அதில் துவாரமிடவும் அவர்கள் சக்தி பெறவில்லை.
எனவே யஃஜூஜ் மஃஜூஜ் மனிதர்கள் தான்
அவர்களின் முகங்கள் கேடயம் போல் அகன்றதாகவும், (வட்டமாகவும்) கண்கள் சிறியதாகவும், முடிகள் செம்பட்டையாகவும் அமைந்திருப்பார்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: காலித் பின் அப்துல்லாஹ் (ரலி), நூல்: அஹ்மத் 21299
யஃஜூஜ் மஃஜூஜ் வந்துவிட்டார்கள் என்பதற்கு அடையாளத்தை பார்ப்போம்
அல்லாஹ் "யஃஜூஜ்" "மஃஜூஜ்" கூட்டத்தாரை அனுப்புவான். அவர்கள் ஒவ்வோர் உயரமான பகுதியிலிருந்தும் வேகமாக(க் கீழே இறங்கி) வருவார்கள். அவர்களில் முதல் அணியினர் (ஜோர்தானில் உள்ள) "தபரிய்யா" ஏரியைக் கடந்து செல்லும்போது, அதிலுள்ள மொத்த நீரையும் குடித்துவிடுவார்கள். அவர்களின் இறுதி அணியினர் அதைக் கடந்து செல்லும்போது. "முன்னொரு காலத்தில் இந்த ஏரியில் தண்ணீர் இருந்திருக்கும்" என்று பேசிக்கொள்வார்கள்
ஸஹீஹ் முஸ்லிம் : 5629.
ஸஹீஹ் முஸ்லிம் : 5629.
அவர்கள் வந்தால் தபரிய்யா ஏரித்தண்ணீரை குடித்து உடனே காலிபண்ணி விடுவார்கள் ஆகையால் அவர்கள் இன்னும் வரவில்லை என்று நினைத்துக் கொண்டு இருக்கிறோம் ஆனால் மற்றோரு ஹதீஸில்
முஸ்லிம் 5638: தபரிய்யா நீர்நிலை பற்றி எனக்குச் சொல்லுங்கள்" என்று கேட்டான். "அதில் எதைப் பற்றி நீ கேட்கிறாய்?"என்று நாங்கள் கேட்டோம். அதற்கு அவன், "அதில் தண்ணீர் இருக்கிறதா?" என்று கேட்டான். நாங்கள், "அதில் தண்ணீர் அதிகமாக இருக்கிறது" என்று பதிலளித்தோம். அவன், "அறிந்துகொள்ளுங்கள்: அதிலுள்ள நீர் வற்றும் காலம் நெருங்கிவிட்டது" என்று சொன்னான்.
Post a Comment