தல அஜித்திற்கு சினிமா துறையில் உள்ள முன்னணி பிரபலங்களே பலரும் ரசிகர்களாக உள்ளனர். அவர்கள் அஜித்தின் குணம் பற்றி பேசி கேட்டிருப்போம்.
அச்சம் என்பது மடமையடா படத்தில் சிம்புவிற்கு தங்கையாக நடித்தவர் பிரபல நடிகை அஞ்சலி ராவ். அவர் ஆரம்பம் பட ஷூட்டிங் சமயத்தில் ஒருமுறை ஒரு பிரபல ஹோட்டலில் அஜித்தை சந்தித்தாராம். அஜித் அப்போது வேறு யாருடனோ பேசிக்கொண்டிருந்தாராம்.
ஒரு போட்டோ எடுக்க கேட்பதற்காக தயங்கி தயங்கி அங்கேயே இருந்துள்ளார் அஞ்சலி பாட்டில். பின்னர் அவரே அழைத்து பேசியுள்ளார். 'ஒரு போட்டோ எடுத்துக்கொள்ளலாமா? என கேட்டதும் ஓகே சொல்லிவிட்டார்.
"நான் அவரை விட உயரம் மிக குறைவு அதனால் போட்டோ எடுக்க பல முறை முயன்றும் முடியவில்லை. அதன் பின் அவரே குனிந்து போட்டோ எடுத்து கொடுத்தார்" என அஞ்சலி ராவ் கூறியுள்ளார்.
"பலரும் அஜித் பற்றி சொல்லி கேட்டிருக்கிறேன். அவர் ரொம்ப down to earth, புகழை தலைக்கு ஏற்றிக்கொள்ளாதவர். எல்லோரையும் கவனிப்பார். சாப்பாடு வந்ததா, டீ வந்ததா என அனைவரிடமும் கேட்பார். அவரை போல யாராலும் இருக்க முடியாது" என அஞ்சலி மேலும் தெரிவித்துள்ளார்.
Post a Comment