லோக்சபா தேர்தலில் தனது மக்கள் நீதி மய்யம் போட்டியிட இருக்கும் 21 தொகுதிகளின் வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை சற்றுமுன்னர் வெளியிட்டார் அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன். இப்பட்டியலில் அதிகபட்சமாக வழக்கறிஞர்கள் இடம் பெற்றிருந்தனர்.
21 பேர் கொண்ட பட்டியலில் தான் போட்டியிடவிருக்கும் தொகுதி பற்றிய விபரத்தையும், மீதமுள்ள 19 தொகுதி வேட்பாளர்களின் பட்டியலும் வரும் 24ம் தேதியன்று கோவையில் வைத்து வெளியிடப்படும் என்று பத்திரிகையாளர்கள் முன்னிலையில் கமல் அறிவித்தார். இன்று அறிவிக்கப்பட்ட வேட்பாளர் விபரம் வருமாறு...
1.திருவள்ளூர் (தனி)- டாக்டர்.எம்.லோகரங்கன்.
2.வேலூர் - ஆர்.சுரேஷ்
3.சேலம்- ரகுமணிகண்டன்
4.வடசென்னை.ஏ.ஜி.மவுரியா
5.மத்திய சென்னை- கமீலா நாசர்.
6.தூத்துக்குடி- பொன்.குமரன்.
7.அரக்கோணம்-ராஜேந்திரன்.
8.திருநெல்வேலி- எம்.வெள்ளிமலை
9.கன்னியாகுமரி- எபிநேசன்.
10.விழுப்புரம் (தனி)- அன்பில் பொய்யாமொழி
11.சிதம்பரம் (தனி)- பி.ரவி.
12.மயிலாடுதுறை- ரிபாய்தின்
13.நாகப்பட்டினம் (தனி)- கே.குருவையா
14.தேனி- எஸ்.ராதாகிருஷ்ணன்
15.கிருஷ்ணகிரி- எஸ்.கார்ண்யா
16..ஸ்ரீபெரும்புதூர்- எம்.சிவக்குமார்
17.தர்மபுரி- வழக்கறிஞர் ராஜசேகர்.
18.நீலகிரி (தனி) -ராஜேந்திரன்
19திண்டுக்கல்- எம்.சுதாகர்.
20.திருச்சி-வி.அனந்தராஜா
21புதுச்சேரி- எம்.ஏ.எஸ்.சுப்ரமணியம்
Post a Comment