லோக்சபா தேர்தல் முக்கியமல்ல.. சட்டசபை இடைத்தேர்தலுக்கு கமல் பலே திட்டம்- வீடியோ சென்னை: தமிழகத்தில் நடக்கும் சட்டசபை இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சியும் போட்டியிடும் என்று செய்திகள் வருகிறது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதி லோக்சபா தேர்தல் ஒரே கட்டமாக நடக்க உள்ளது. அதே நாளில் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தலும் நடக்க உள்ளது.
மொத்தம் உள்ள 21 காலி இடங்களில் 18 இடங்களுக்கு மட்டுமே தேர்தல் நடக்கிறது. 3 இடங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் அங்கு தேர்தல் நடக்கவில்லை.
மக்கள் நீதி மய்யம் முடிவு ஏற்கனவே லோக்சபா தேர்தலில் போட்டியிட போவதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்து இருக்கிறது. லோக்சபா தேர்தலில் தனித்து போட்டியிட போகிறோம்.
திமுக, அதிமுக கூட்டணியில் சேர மாட்டோம். நாங்கள் புதிய பாதையை ஏற்படுத்துவோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சி அறிவித்து இருக்கிறது. தலைவர் கமல்ஹாசன் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
5 வருடங்களில் எந்த பிரதமரும் செய்யாத சாதனை.. மோடியின் பெருமைகளில் இது முக்கியமானது! முக்கியம் இந்த நிலையில்தான் தற்போது லோக்சபா தேர்தலுடன் சேர்த்து தமிழக சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ளது.
18 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிட முடிவு செய்து உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று கூறுகிறார்கள்.
தனித்து போட்டி இந்த லோக்சபா தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தனித்து போட்டியிடுவது போலவே சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளது.
18 தொகுதிகளிலும் முக்கியமான வேட்பாளர்களை நிறுத்த மக்கள் நீதி மய்யம் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கான அறிவிப்புகள் மிக விரைவில் வெளியாகலாம். கமல்ஹாசன் திட்டம் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இருக்கிறது என்று கமல்ஹாசன் ஏற்கனவே குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில், கமல்ஹாசன் இந்த முறை சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டு தமிழக சட்டசபைக்கு செல்ல திட்டமிட்டு இருக்கிறார் என்கிறார்கள்.
ஆம் லோக்சபாவை விட சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிடுவதே சிறந்தது என்று அவருக்கு ஆலோசனை வழங்கப்பட்டு இருக்கிறது. இதுதான் பிளான் தமிழக முதல்வராகும் எண்ணத்தில் இருக்கிறார் கமல்ஹாசன்.
இதனால் தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் போட்டியிட்டு, இப்போதே ஒரு எம்எல்ஏ சீட் பெற்று சட்டசபை பாடத்தை கற்கும் எண்ணத்தில் அவர் இருக்கிறார் என்று கூறுகிறார்கள்.
ஆனால் மக்கள் நீதி மய்யம் தரப்பில் இருந்து இதுவரை இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. விரைவில் கமல்ஹாசன் இதுகுறித்து பேச வாய்ப்புள்ளது.
Post a Comment