சென்னை: தண்ணியில்லாக் காடு என்றாலே ராமநாதபுரம்தான்.. அதனாலதான் இலவச குடிநீர் வழங்கப்பட்டு.. அதை வாக்குகளாக மாற்றும் முயற்சியில் மக்கள் நீதி மய்யம் ஈடுபட்டுள்ளது.
வரும் எம்பி மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிட போவதாக மக்கள் நீதி மய்யம் அறிவித்துவிட்டது. கட்சி சின்னம், விருப்ப மனு தாக்கல், நேர்காணல் என அடுத்தடுத்த வேலைகள் தீவிரமாக நடந்து வருகிறது.
ஆனால் வேட்பாளர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. என்றாலும் மத்திய சென்னையில் நாசர் மனைவி கமீலா நாசர் போட்டியிடப் போவதாக தகவல்கள் வருகின்றன.
உரிமை
அதேபோல, கமலஹாசனும் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட உள்ளதாக முன்பிருந்தே சொல்லப்பட்டு வருகிறது. அந்த தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் என்று தொகுதி மக்களும் உரிமையாக கமலிடம் கேட்டு வருகிறார்கள். தொகுதியிலுள்ள கட்சி நிர்வாகிகளும் இரட்டை இலக்கத்தில் விருப்பமனுக் கட்டியுள்ளனர். ஆனால் கமல் இதைப்பற்றி இதுவரை எதுவும் சொல்லாமல் இருந்தாலும், அவரது கட்சியினர் முன்கூட்டியே தொகுதி பிரச்சனையில் ஆழமாக இறங்கி தூர் வார ஆரம்பித்துவிட்டனர்.
குடிநீர்
குறிப்பாக குடிநீர்_பிரச்சனையை கையிலெடுத்து தொகுதி முழுக்க இலவசமாக குடி நீர் விநியோகம் செய்து வருகிறார்கள் மய்ய உறுப்பினர்கள் என்று கேள்விப்பட்டோம். உடனே இதுகுறித்து மய்யத்தின் மாவட்ட நிர்வாகிகளிடம் பேசினோம். அவர்கள் சொன்னதாவது:
சரி செய்யுங்கள்
"அன்னைக்கும் சரி, இன்னைக்கும் சரி, தண்ணியில்லாக் காடு என்றாலே ராமநாதபுரம் மாவட்டம்தான். அந்த அளவுக்கு தண்ணீர் பிரச்சனை. கட்சி ஆரம்பிக்கும்போதே, "உங்கள் ஊரிலுள்ள பிரச்சனைகள் என்னென்ன, ஒரு லிஸ்ட் போடுங்க, அதை சரி செய்ய முயலுங்கள்" என்று கமல் சொன்னார். அதன்படி நாங்கள் இந்த 6 மாசமாக இலவசமாக தண்ணீர் வழங்கி வருகிறோம்
இலவச விற்பனை
இலவச விற்பனை
இதுவரை பரமக்குடி தாலுகாவில் சோமநாதபுரம், வெங்கடேஷ்வரா காலனி, குலவிப்பட்டி மற்றும் அண்டக்குடி உள்ளிட்ட 25 கிராமங்களுக்கும் மூன்று நாளுக்கு ஒரு முறை தண்ணீர் லாரி கொண்டு சென்று அவர்களின் குடி நீர் பிரச்சனையை தீர்த்து வருகின்றோம். இந்த 6 மாசத்தில் மாவட்டம் முழுசும் இந்த பணி விரிவடைந்துள்ளது. இது கண்டிப்பாக வாக்குகளாக மாறும். கமல் இங்கு போட்டியிட்டால் வெற்றி நிச்சயம். இதனை தலைமைக்கு தெரியப்படுத்தி உள்ளோம்." என்கின்றனர் மாவட்ட நிர்வாகிகள்.
மீனவர் பிரச்சனை
மீனவர் பிரச்சனை
தென் மாவட்டங்களைப் பொறுத்தவரை தொழில் வளர்ச்சி மிக மிக குறைவு. சென்னை, கொங்கு மண்டலத்துடன் ஒப்பிடுகையில் தென் மாவட்டங்கள் மிக மிக பின்தங்கியுள்ளன. அதிலும் ராமநாதபுரத்தில் தொழில் வளர்ச்சி சுத்தமாக இல்லை. அதிலும் மீனவர் பிரச்சினையும் இங்கு ஏராளம். இதெல்லாம் இத்தனை காலமாக இருந்த அரசுகளால், எம்.பிக்களால் தீர்க்ப்படாமலேயேதான் உள்ளன. இதில் கமல் கை வைத்தால் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்களிடம் உள்ளன.
கரை ஏற்றுவாரா?
கரை ஏற்றுவாரா?
இலவச குடிநீர் கமலுக்கு வாக்குகளை வாங்கித் தருமா? தொழில் வளர்ச்சி தொடர்பாக அவர் புதிய திட்டங்களை கையில் எடுப்பாரா, ராமநாதபுரத்தை கரை ஏற்றுவாரா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்!
Post a Comment