
தல அஜித் நடித்து வரும் 'நேர்கொண்ட பார்வை' திரைப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக இடைவெளியின்றி நடைபெற்று வருவது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தில் அஜித் ஜோடியாக நடிக்கும் வித்யாபாலன் காட்சிகளின் படப்பிடிப்பு இன்னும் ஒரிரு நாட்களில் நடைபெறவுள்ளதாகவும், அவர் இந்த படத்திற்காக இரண்டு நாட்கள் மட்டுமே நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் அஜித் தோன்றும் அனைத்து காட்சிகளும் ஐதராபாத்திலேயே படமாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், மூன்று ஹீரோயின்கள் காட்சிகள் மட்டுமே வெளிப்புறப்படப்பிடிப்பில் இருக்கும் என்றும் அதிகபட்சமாக ஏப்ரல் முதல் வாரத்தில் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

எச்.வினோத் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா இசையில் உருவாகி வரும் இந்த படத்தில் அஜித், வித்யாபாலன், ஷராதாஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், ஆண்ட்ரியா தரங், அஸ்வின் ராவ், சுஜித் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தை போனிகபூர் பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.
Post a Comment