சென்னை: ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கே கொண்டு வந்து கொடுக்கப்படும் என கமல்ஹாசன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் லோக்சபா தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகளுடன் கூட்டணி இல்லை என அறிவித்தார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ கு தமிழரசன் கமலை சந்தித்தார். அப்போது அக்கட்சியுடன் கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தாகின. இதில் இந்திய குடியரசு கட்சிக்கு லோக்சபா தேர்தலில் ஒரு தொகுதியும் தமிழக சட்டசபை இடைத்தேர்தலில் 3 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அது போல் வளரும் தமிழகம் கட்சியின் தலைவர் துரையரசனும் கமல்ஹாசனை சந்தித்தார். இதில் சட்டசபை இடைத்தேர்தலில் அக்கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. இரு கட்சிகளும் டார்ச்லைட் சின்னத்தில் போட்டியிடவுள்ளன.
இந்த நிலையில் மீதமுள்ள 18 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் கோவையில் நடைபெற்ற கூட்டத்தில் கமல்ஹாசன் அறிவித்தார். இந்த கூட்டத்தில் மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையையும் அவர் வெளியிட்டார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது. அதில் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
5 ஆண்டுகளுக்கு சுத்தமான குடிநீர் வசதி.
5 ஆண்டுகளில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு. 500 திறன் மே்முபாட்டு மையங்கள் அமைக்கப்படும்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் பேரின் வறுமை அகற்றுவோம்.
குடிசை இல்லா தமிழகம் காண்போம்.
தமிழகத்தின் மொத்த பொருளாதார ஆதாரமான விவசாயம், தொழில் துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
விவசாயம் உள்ளிட்ட தொழில்களில் பணியாற்றும் ஆணுக்கு நிகராக பெண்ணுக்கும் ஊதியம்.
உலகம் பரவியுள்ள தமிழர்கள் ஒன்று சேர்ந்து உரிமைகளை காப்போம்
ஊழலுக்கு எதிராக பல் இல்லா லோக் ஆயுக்தவை வலுப்படுத்தப்படும்.
சுங்க வரி கட்டணங்கள் ரத்து செய்யப்படும்.
ரேஷன் பொருட்கள் வீட்டுக்கே கொண்டு வரப்படும்வ.
இலவச வைபை வழங்கும் திட்டம்...
Post a Comment