சென்னை: எல்லாவற்றையுமே படு வித்தியாசமாக முன்னெடுத்து செல்லும் மக்கள் நீதி மய்யம் நேர்காணல் நிகழ்ச்சியையும் வித்தியாசமாகவே நடத்துகிறது! மக்கள் நீதி மய்யம் நேர்காணலில் கமல் நேரடியாக பங்கேற்று வருகிறார். அதுவும் காலையில் இருந்து இரவு வரை கமலே நேர்காணல் செய்கிறார். அது மட்டுமில்லை.. நேர்காணல் செய்பவர்கள் பெரும்பாலும் கட்சிக்காரர்களாகத்தான் இருப்பார்கள். அதிலும் முக்கிய பொறுப்பாளர்கள்தான் நேர்காணல் குழுவில் இடம்பெற்றிருப்பார்கள். குறிப்பாக கட்சி தலைவரின் குடும்ப சொந்தங்கள்தான் குழுவில் ஆக்கிரமித்திருப்பார்கள். ஆனால் இங்க அப்படி எல்லாம் கிடையாது.
இலக்கிய புள்ளிகள் ஒரு பக்கம் கட்சிக்காரர்கள் இருந்தாலும் மற்றொரு பக்கம் பத்திரிகையாளர் மதன் இருக்கிறார். இதைதவிர இலக்கிய புள்ளிகள் கண்ணில் படுகிறார்கள். இவர்கள் எல்லாம் நேர்காணல் குழுவில் இல்லாதவர்கள். ஆனால் கமலுடன் இணைந்து உட்கார்ந்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல, பொதுவாக ஒரு கட்சியின் நேர்காணல் நிகழ்ச்சிகள் எப்படி இருக்கும்? என்னென்ன கேள்விகள் கேட்பார்கள்? என்று நமக்கு ஓரளவு திராவிட கட்சிகள் மூலம் தெரியும்.
நற்பணி இயக்கம் அதாவது நேர்காணல் ரூமில் போய் உட்கார்ந்தவுடன் முதல் கேள்வியே "எத்தனை கோடி செலவு பண்ணுவீங்க?" என்பதுதான். எத்தனை ஆயிரம், எத்தனை லட்சம், என்பதெல்லாம் கிடையாது. ஸ்டிரைட்டா... "கோடி"தான். ஆனால் இங்கு அப்படி இல்லை. "நற்பணி இயக்கத்திற்கு இதுவரை என்ன செய்திருக்கிறீர்கள், உங்கள் தொகுதி பிரச்சனைகளுக்காக ஏதாவது போராட்டம் நடத்தி இருக்கிறீர்களா?" இதுதான் முதல் கேள்வியே.
குறிப்புகள் இப்படித்தான் ஒவ்வொருவரிடமும் கேள்வி கேட்கப்படுகிறது. கேள்விகளை ஒருவரே கேட்பதில்லை. எல்லோருமே கேட்கிறார்கள். வேட்பாளர்கள் பதில்கள் சொல்ல சொல்ல, அதை அங்கிருக்கும் குழுவினர் உடனடியாக குறித்து வைத்து கொள்கிறார்கள். கமலும் கையில் ஒரு பேனா வைத்து கொண்டு அதை குறிப்பெடுத்து கொள்கிறார்.
கலந்துரையாடல் ஆக மொத்தம் இதையெல்லாம் பார்த்தால், நேர்காணல் போலவே இல்லை.. ஏதோ ஒன்றாக உட்கார்ந்து கலந்துரையாடுவதை போல உள்ளது! வேட்பாளர்களுக்கு மட்டும் இது புதுசு இல்லை.. நமக்கும்தான்!

Post a Comment