
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியினரை 2 மினி பேருந்துகளில் அடக்கி விடலாம் என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
தி.மு.க. மற்றும் அ.ம.மு.க. வுக்கு வாக்களிப்பது, வாக்குகளை வீண் அடிப்பதற்கு சமம். திடீரென குடிப்பதை நிறுத்தினால் நரம்புத் தளர்ச்சி ஏற்படும் என்று நான் ஸ்டாப் ஆக பேசி வருகிறார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. 
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசிய அவர், ‘’இந்தத் தேர்தலோடு கமல்ஹாசன் கட்சி காணாமல் போய்விடும். கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியினரை 2 மினி பேருந்துகளில் அடக்கி விடலாம். மக்களவை தேர்தலுக்குப் பின் அதிமுகவின் அரசியல் அதிகாரம் டெல்லி வரை செல்லும். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலையை கருத்தில் கொண்டு அவர் தேர்தல் பிரச்சாரத்திற்கு வருவதை நாங்கள் விரும்பவில்லை என்று அவர் தெரிவித்தார்.
Post a Comment