பொங்கலுக்கு சில நாட்களுக்கு முன்பே வெளியானது. இரண்டு படங்களுமே மாஸ் ஹீரோக்களின் படம் என்பதால் எது பாக்ஸ் ஆபிசில் முதலிடம் பிடிக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களுக்கிடையே இருந்தது. இரண்டு படங்களுக்குமே விமர்சன மற்றும் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. ஆனால், படத்தில் உள்ள சில ப்ளஸால் பேட்ட படத்தைவிட விஸ்வாசம் வசூலில் அதகளம் செய்து வருகிறது.
ரஜினி எப்போதுமே தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பி மற்றும் சி சென்டர்களில் பேட்ட மூலம் கோட்டை விட்டதே, அஜித்தின் விஸ்வாசத்திற்கு போனது தெரிகிறது. பேட்ட படத்தைவிட விஸ்வாசம் குடும்பக் கதையில் தேவையான அளவு சென்டிமெண்ட், காதல், ரொமான்ஸ், காமெடி, ஆக்ஷன் என அனைத்து தரப்பு ரசிகர்களுக்கும் இயக்குநர் கொடுத்திருப்பதே இந்த வெற்றிக்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
அஜித் இந்தப் படத்தில் தூக்குதுரை கதாபாத்திரத்தில் மதுரை ஸ்லாங்கில் பேசி அசத்தி இருக்கிறார். அவர் தனது மகளின் பாசத்திற்காக உருகும் தந்தையாக காட்சிக்கு காட்சிகள் தந்தைகளை கண்கலங்க வைத்து விடுகிறார். இதனால் குடும்பத்துடன் இப்படத்தைப் பார்க்க மக்கள் அதிகளவில் விரும்புகின்றனர்.
அதுமட்டுமல்ல, வெற்றியின் ஒளிப்பதிவு, ஈமானின் கலக்கலான பின்னணி இசை (BGM) என மிரட்டியது, எடிட்டிங் ரூபனும் கட்சிதமாக வேலை பார்த்துள்ளார். ஒட்டுமொத்தமாக சிவா தியேட்டருக்கு வரும் ஆடியன்ஸை அழவைக்காமல் விடக்கூடாது என்ற நோக்கத்தில் வேலை பார்த்துள்ளது தெரிகிறது.
அடுத்ததாக நம்ம தலைவர் நடித்த பேட்ட படத்தை பார்க்கலாம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, நவாசுத்தீன் சித்திக்கி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்த பேட்ட படம் கடந்த 10ம் தேதி வெளியானது. படம் ரிலீஸாவதற்கு முன்பே ஓவராக பில்ட்அப் கொடுத்திருந்தார்கள். ஆடியோ லான்ச், டீசர், டிரெய்லர் என மிரட்டினார்கள்.
ரிலீஸுக்கு முன்பு கொடுத்த ஓவர் பில்ட்அப்பால் எதிர்பார்ப்பு எகிறிவிட்டது. ஆனால் படத்தை பார்த்தபோது அந்த எதிர்பார்ப்பு நிறைவேறாமல் ஏமாற்றமே மிஞ்சியது. ஆமாம் பேட்ட படத்தில் ஒரு கூட்டமே நுழையும் அளவிற்கு பெரிய பெரிய ஓட்டைகள் நிறைய உள்ளன.
அதுமட்டுமல்ல படம் ரொம்ம்ப்ப்ப அதிக நேரம் ஓடுகிறது. இடைவேளை எப்பொழுது வரும் என "ச்சு ச்சூ" முட்டிகிட்டு உட்காரும் அளவிற்கு காத்திருக்க வைத்து விடுகிறார். அதன் பிறகு இரண்டாம் பாதி முடிவதற்குள் தியேட்டர்களில் விடிந்து விடுகிறது, நாம ரசித்த பழைய ரஜினியை பார்க்க என்ன ஒரு சந்தோஷம், அப்படி ஒரு ஆனந்தம். ஆனால் இந்த அளவுக்கு காட்டினாள் எப்படி? ரஜினியை கொண்டாடுவதில் குறியாக இருந்த கார்த்திக் எதார்த்தத்தை தொலைத்துவிட்டார்.
கடைசியா சொல்லணும்ன்னா, ட்ரெய்லரில் சொன்ன சிறப்பான தரமான சம்பவம் எப்பொழுது வரும் என்று எதிர்பார்த்து எதிர்பார்த்து இறுதியில் அந்த சம்பவத்தை பார்க்கும்போது அட இவ்வளவு தானா என்று சலித்துக் கொள்ள வைத்துவிட்டது. ரஜினியின் நடிப்பை யாராலும் குறைசொல்ல முடியாது. அவர் சிறப்பான நடிகர். அவர் சூப்பர் ஸ்டார் தான் முள்ளும் மலரும், கபாலி, காலா மாதிரி நடிப்புக்கு தீனி போடும் படமாக மட்டுமே இருந்தால் சூப்பர்ஸ்டாராகவே இருப்பார். படையப்பா, பாட்ஷா மாதிரி மாஸா எடுக்க நினைத்தால் எப்படி?
Post a Comment