சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாட்டில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த நடிகர் அஜித்குமார் குழு தயாரித்த ஏர்டாக்ஸியில் அமர்ந்து பார்த்த அமைச்சர் ஜெயகுமார் அதனை தயாரித்த நடிகர் அஜித்தை பாராட்டினார். அஜித் இவ்வளவு திறமைசாலியா எனறு ஜெயகுமார் வியந்தார்.
நடிகர் அஜித் நடிப்பு மட்டுமில்லாமல், இரு சக்கர வாகன ரேஸ், கார் ரேஸ், ரிமோட் கண்ட்ரோல் மூலம் குட்டி விமானங்கள இயக்குவது உள்ளிட்ட பல விளையாட்டுகளில் ஈடுபாடுகொண்டவர்.
இந்நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அஜித்குமாரை தொழில் நுட்ப வழிகாட்டியாக கொண்ட தக் ஷா மாணவர் குழு இந்தியாவில் முதல் முறையாக ட்ரோன் மூலம் வானில் பறக்கும் ஏர் டாக்சியை தயாரித்து சாதனை படைத்தது.
இந்த ஏர் டாக்சி மூலம் மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளை போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் விரைவாக கொண்டு சேர்க்க முடியும். அதேபோல், உடல் உறுப்பு தானத்துக்கும் உதவும் வகையிலும் இந்த ஏர் ஆம்புலன்ஸ் வடிவமைக்கப்பட்டது.80 கிலோ எடை கொண்ட மனிதர்களை இந்த விமானத்தில் தூக்கி செல்ல முடியும். இந்த விமானம், தற்போது சென்னையிலிருந்து வேலூர் வரை செல்லும் ஆற்றல் உடையது.
20 கிலோ மீட்டர் சுற்றளவில் எளிதாக பறந்து செல்லும் இந்த ஏர் டாக்ஸி, சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்ட்டரில் தமிழக அரசு சார்பில் நடக்கும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.
அங்கு வந்த முதலீட்டாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே அந்த டிரோன் டாக்ஸி மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனிடையே அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கி கண்காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த டிரோன் டாக்ஸியில் அமைச்சர் ஜெயகுமார் அமர்ந்து அதன் செயல்பாடுகளை கேட்டறிந்தார்.
தொடர்ந்து அதனை உருவாக்கிய நடிகர் அஜித்குமார் மற்றும் அண்ணா பல்கலைக்கழக மாணவர்களை வெகுவாக பாராட்டினார். மேலும் நடிகர் அஜித் இவ்வளவு திறமைசாலியா என வியந்தார்.
Post a Comment