நடிப்பை நிறுத்திய பிறகே நடிப்பின் அருமை அதிகமாக தெரிவதாக நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துளார்
தமிழர் திருநாளான பொங்கல் விழா தை 1ம் தேதி கொண்டாடப்படுகிறது. பண்டிகையை வரவேற்கும் விதமாக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாரம்பரிய விழாக்களும், கலாசார திருவிழாக்களும் நடைபெற்று வருகின்றன. அதன்படி "பொங்கு தமிழ் 2019" ராயப்பேட்டை YMCA மைதானத்தில் சார்பில் பொங்கல் விழா நடைபெற்றது. இந்த தமிழ் பாரம்பரிய கலை விழா மற்றும் சர்வதேச கண்காட்சியை நடிகர் கமல்ஹாசன் இன்று தொடங்கி வைத்தார்.
தொடக்க விழாவில் பேசிய அவர், ''தமிழர் என்பது அடையாளமல்ல, முகவரி. நடிப்பதை நிறுத்திய பிறகே எனக்கு நடிப்பின் அருமை அதிகமாக தெரிகிறது. தமிழை வளர்ப்பது தமிழர்கள் தான். பல கலைகள் எனக்கு புரியும். இப்போது தான் கலைகள் எனக்கு பிடிக்கிறது. ஆனால் இப்போது நான் நடிப்பதை நிறுத்திவிட்டேன். பள்ளியை விட்டு நின்ற பிறகு பள்ளியின் அருமை தெரிவது போல, நடிப்பை நிறுத்திய பிறகே நடிப்பின் அருமை எனக்கு அதிகமாக தெரிகிறது. நாளை நமதாகட்டும் என்று பேசினார்.
ராயப்பேட்டை YMCA மைதானத்தில் தொடங்கிய சர்வதேச கண்காட்சி இன்று முதல் மூன்று நாளைக்கு நடைபெறவுள்ளது.

Post a Comment