சென்னை: விஸ்வாசம் படத்தின் முதல் விமர்சனமாக தனது கருத்தை பதிவிட்டுள்ளார் ஐக்கிய அரபு நாடுகள் சென்சார் போர்டு உறுப்பினர் உமர் சந்து.
ஐக்கிய அரபு நாட்டின் சென்சார் போர்டு உறுப்பினர்களில் ஒருவரான உமர் சந்து, சமீபகாலமாக தமிழின் முன்னணி நடிகர்கள் படத்தை ரிலீசுக்கு முன்னதாக தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சனமாக வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
அவரது விமர்சனம் ஏறக்குறைய மிகச் சரியாகவே இருப்பதால், ரசிகர்களும் அவரது விமர்சனத்தை ஆவலாகவே எதிர்பார்க்கின்றனர்.
அந்தவகையில், சிவா இயக்கத்தில் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படத்தைப் பற்றிய தனது விமர்சனத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார் உமர்.
மிரட்டல்:
மாஸ் மிரட்டல்:
மாஸ் மிரட்டல்:
அதில், "சென்சாரில் படம் பார்த்து முடித்து விட்டேன். என்ன ஒரு பயங்கர மிரட்டலான மாஸ் பொழுதுபோக்கு படம். விஸ்வாசம் படத்தின் முதல்பாதி சூப்பராகவும், நல்ல பொழுதுபோக்கு அம்சங்களுடனும் நிறைந்துள்ளது. அஜித் மிரட்டலாக நடித்துள்ளார். ரசிகர்களை இதயத்தை திருடுகிறார்" என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
DONE WITH OVERSEAS CENSOR SCREENING OF #VISWASAM !! WHAT A TERRIFIC MASS ENTERTAINER !!
Post a Comment