இரண்டு டாப் ஹீரோக்களின் படங்கள் ஒரே நாளில் வெளியானால் பாக்ஸ்ஆபிஸ் வசூலில் யார் முன்னணி என்கிற பேச்சு வருவது சாதாரணமாக நடக்கும் விஷயம் தான்.
ஆனால் பேட்ட மற்றும் விஸ்வாசம் பிரச்சனையில் அது எல்லைமீறிபோய் பேட்ட படத்தின் தயாரிப்பாளரே எதிர்ப்பு தெரிவிக்கும் அளவுக்கு சர்ச்சை ஆகியுள்ளது.
இந்நிலையில் பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் போட்டுள்ள ட்விட்டரில், "பாக்ஸ்ஆபிஸ் ட்ராக்கர்கள் வெளியிடும் விவரங்களில் தவறு இருப்பது போல தெரியவில்லை. அவர்களுக்கு வரும் தகவலை வெளியிடுகிறார்கள். ஆனால் அதை ஏற்றுக்கொள்வதும் அல்லது நிராகரிப்பதும் தயாரிப்பாளரின் முடிவு. ஆனால் அதிகாரபூர்வ வசூல் விவரத்தை வெளியிடவேண்டியது தயாரிப்பாளரின் கடமை" என கூறியுள்ளார்.
சர்கார் வசூல் விவரத்தை ஏற்றுக்கொண்ட சன் பிக்சர்ஸ் பேட்ட வசூல் பற்றி வரும் செய்திகளை எதிர்ப்பது ஏன் என பலரும் சமூக வலைத்தளங்களில் பொழந்துகட்டி வருகின்றனர்..
Post a Comment