அஜித்தின் நடிப்பில் நேற்று விஸ்வாசம் படம் வெளியானது. ரஜினியின் பேட்டயுடன் வெளியானாலும் முதல் நாளில் நல்ல வசூலை ஈட்டியிருந்தது. குறிப்பாக குடும்ப ரசிகர்களை வெகுவாக ஈர்த்து இருந்தது. இதனால் ரசிகர்கள் குடும்ப குடும்பமாக திரையரங்கிற்கு வந்திருந்தனர்.
அதிலும் கிளைமாக்ஸில் தந்தை மகளுக்குமான பாசத்தை ஆழமாக இயக்குனர் சிவா காட்சிப்படுத்தியிருந்தார். இதனால் படம் பார்த்த ரசிகர்களில் பலர் அழுத முகத்துடனே தியேட்டரை விட்டு சென்றனர்.
அதுபோல தான் இந்த படத்தை பார்த்து கொண்டிருந்த சிறுவன் ஒருவன் தியேட்டரிலேயே அழும் வீடியோ ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.


SFC 

Post a Comment