சென்னை: விஸ்வாசம் படம் ரிலீஸான 3 நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, கோவை சரளா உள்ளிட்டோர் நடித்த விஸ்வாசம் படம் கடந்த 10ம் தேதி ரிலீஸானது. படம் ரிலீஸான அன்றே தமிழகத்தில் வசூலில் ரஜினியின் பேட்ட படத்தை முந்தியது.
ரஜினியின் பேட்ட படமும் அதே நாளில் வெளியானதால் விஸ்வாசத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை.
விஸ்வாசம் அஜித்
விஸ்வாசம் குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது. சாதாரண மக்கள் மட்டும் அல்ல பிரபலங்களும் தங்கள் குடும்பத்தார், நண்பர்களுடன் சென்று தியேட்டரில் படம் பார்க்கிறார்கள். தமிழ் ராக்கர்ஸில் படம் கசிந்த போதிலும் தியேட்டர்களுக்கு செல்பவர்கள் சென்று கொண்டு தான் இருக்கிறார்கள்.
குடும்பம்
வசூல்
வசூல்
விஸ்வாசம் படம் ரிலீஸான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. படத்தில் அஜித்துக்கு ஓவர் பில்ட்அப் கிடையாது, குடும்ப சென்டிமென்ட் அளவோடு சேர்க்கப்பட்டது பெரிதும் கை கொடுத்துள்ளது.

சென்னை
ரூ. 1 கோடி
ரூ. 1 கோடி
சென்னை பாக்ஸ் ஆபீஸில் முதல் முறையாக விஸ்வாசம் நேற்று ஒரே நாளில் ரூ. 1.04 கோடி வசூல் செய்துள்ளது. படம் வெளியான மூன்று நாட்களில் சென்னையில் மட்டும் ரூ. 2.78 கோடி வசூலித்துள்ளது. படம் ரிலீஸான நாளை விட நேற்று வசூல் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா
சிங்கப்பூர்
சிங்கப்பூர்
அமெரிக்காவில் விஸ்வாசம் ரூ. 1 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. சிங்கப்பூரில் படம் ரிலீஸான இரண்டு நாட்களில் ரூ. 1.48 கோடி வசூல் செய்துள்ளது. விஸ்வாசம் படம் ஓடும் தியேட்டர்களுக்கு வரும் குடும்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோட்டை
பி., சி.
பி., சி.
ரஜினியின் கோட்டையாக இருந்த பி. மற்றும் சி. சென்டர்களை விஸ்வாசம் பிடித்துள்ளது. சிவா அளந்து கொடுத்த சென்டிமென்ட் ஒர்க்அவுட் ஆகிவிட்டதால் பி. அன்ட் சி. சென்டர்களில் படத்தை கொண்டாடுகிறார்கள்
Post a Comment