HEADER

... (several lines of customized programming code appear here)

Tuesday 8 January 2019

அஜித் ரசிகர்கள் செதுக்கிய கட் அவுட்டை பார்த்து ஆடிப்போய் இருக்கும் விஜய் ரசிகர்கள்..



'சர்கார்' படத்துக்கு விஜய்க்கு வைக்கப்பட்ட 175 அடி கட் அவுட்டுக்கு சவால் விடும் வகையில் அஜீத் ரசிகர்கள் 'விஸ்வாசம்' படத்துக்கு 200 அடியில் கட் அவுட் வைத்து அசத்தியுள்ளனர்.

'சர்கார்' ரிலீஸ் சமயத்தில் கொல்லம் நகருக்கே வெளியே ஒரு மைதானத்தில் பட ரிலீஸுக்கு மூன்று தினங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த அந்த 175 அடி உயர கட் அவுட் தான் இதுவரை இந்திய சினிமாவில் வைக்கப்பட்ட கட் அவுட்களிலேயே மிக உயரமானது என்று சொல்லப்பட்டது. இதைப் பார்வையிட சுற்றுலாப் பயணிகள் கூட வர ஆரம்பித்துவிட்டார்கள்.

அதை சற்றும் மறக்காமல் கவனத்தில் வைத்திருந்த திருச்செந்தூர் அஜீத் ரசிகர்கள் சுமார் ஒரு வாரத்துக்கு முன்பே ஊருக்கு வெளியே ஒரு பொட்டல்வெளியில் பணியைத்துவங்கி 20 அடி அகலமும் 200 அடி நீளமும் கொண்ட கட் அவுட்டை ரெடிசெய்து அசத்தியுள்ளனர். இந்த கட் அவுட் தற்போது வலைதளங்களில் வைரலாகிவருகிறது.
விஜய் கட் அவுட் அமைக்கப்பட்ட இடம் பரபரப்பான சுற்றுலாத்தளம் ஆனதுபோல் இந்த இடமும் சுற்றுலாத்தளமாகும் வாய்ப்பு நிச்சயம் உண்டு.

About the Author

E-FUN and JOY

Author & Editor

Has laoreet percipitur ad. Vide interesset in mei, no his legimus verterem. Et nostrum imperdiet appellantur usu, mnesarchum referrentur id vim.

Post a Comment

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com