HEADER

... (several lines of customized programming code appear here)

Thursday, 31 January 2019




வணக்கம் மக்களே 🙏

  இன்று கொஞ்சம் கர்வமா பீலா இருக்கிறேன் ஏதோ சாதித்து விட்டது போல #இதே ராணி புத்தகம் 99 மே 1 க்கு பிறந்த நாள் வந்த பதிவில் தல பேட்டி வந்தது அதில் ரஜினி சார் மாதிரி வரனும் என்று சொல்லி இருந்தார் #அதே ராணி புத்தகத்தில் இன்று ரியல் சூப்பர் ஸ்டார் என்று வரும் போது காலையில் இருந்து மகிழ்ச்சியா இருக்கு தல அவர்களின் தன்னம்பிக்கை அந்த விட முயற்சி நினைத்து 🙏😍

   அஜித் அண்ணா எந்த இடத்திலும் சூப்பர் ஸ்டாரே ஆக வேண்டும் என்று சொன்னது இல்லை  அவரை போல வரவேண்டும் என்று தான் பல இடங்களில் சொல்லி இருக்கிறார் நாம செய்யும் வேலையில் சிறப்பா யார் இருக்கிறார்களோ அவர்களை போல வர வேண்டும் அவரை விட மேலே வந்து காட்ட வேண்டும் என்று தான் யாராக இருந்தாலும் ஆசை படுவார்கள், லட்சியம் எடுப்பார்கள் தல யும் அதே தான் சொன்னார்

 ஆனால் வில்லன் என்ற சூப்பர் ஹிட் படம் பிறகு லண்டன் சென்று ரேஸில் கலந்து 3 ஆம் இடம் பெற்று அவசரமாக ஆஞ்சநேயா என்ற படம் வரும் போது ரஜினி அவர்கள் படம் அதிகம் நடிக்காத சமயத்தில் குமுதம் நிருபர் ரஜினி இடம் காலியாக உள்ளது அதற்கு போட்டி போடுவிங்களா என்று கேட்க நிச்சயம் அவர் இடத்திற்கு போட்டி போடுவேன் என்று சொன்னார் அதை குமுதம் தன் சிந்தனையில் அதை வேற மாதிரி எழுத அதை டிவியில் அடிக்கடி இந்த வாரம் குமுதம் என்று இந்த செய்தியை வேற மாதிரி பேச வந்த படம் சுமாராக ஓட எத்தனை கிண்டல் எத்தனை நக்கல் எத்தனை கேலி பேச்சு  😈

 அத்தனைக்கும் பல தடவை பதிலடி தந்தாலும் படத்துடன் வந்து பதில் சொன்னது மகிழ்ச்சியோ மகிழ்ச்சி 😍

 தல க்கு சூப்பர் ஸ்டார் பட்டம் எல்லாம் வேண்டாம் ❌ அது ரஜினி சார் தான் எங்களுக்கு #தல  என்ற உன்னதமான பட்டமே  🎓 போதும் 🙏

#தல என்ற உன்னதமான பட்டமே 🎓 போதும்...

  

செயலியின் அளவு        

     தொழில்நுட்ப திருட்டு பல வழிகளில் உள்ளது அதில் இதுவும் ஒன்று. SAMY என்று சொல்லக்கூடிய இந்த செயலியை  SAMY INFORMATICS PVT. LTD. என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. தற்போது இந்த செயலி ப்ளே ஸ்டோரில் 10 எம்பி கொண்ட இந்த அப்ளிகேஷனை இதுவரை 10,000 நபர்களுக்கு மேல் டவுன்லோட் செய்துள்ளனர். இந்த அப்ளிகேஷனுக்கு தற்போது ப்ளே ஸ்டோரில் 5-க்கு 2.7 மதிப்பெண் கிடைத்துள்ளது.

செயலியின் பயன்

    SAMY என்று சொல்லக்கூடிய இந்த நிறுவனம் தற்பொழுது தொழில்நுட்ப திருட்டில் ஈடுபட்டு உள்ளது. அதாவது இவர்கள் டிவியை ரூபாய் 5000 தருவதாக கூறுகிறார்கள் ஆனால் அந்த டிவியை வீட்டுக்கு டெலிவரி செய்வதற்கு மேற்கொண்டு ரூபாய் நான்காயிரம் கேட்கிறார்கள் அதுமட்டுமின்றி உங்களுடைய ஈமெயில் பாஸ்வேர்ட் ஆதார் கார்ட் போன் நம்பர் என அனைத்து தகவல்களையும் கேட்கிறார்கள் மேலும் பல தகவல்களையும் இவர்கள் நம்மிடம் இருந்து கேட்கிறார்கள் இதேபோல் சில வருடங்களுக்கு முன்பு இந்தியா 201 என்ற மொபைல் வந்தது அதில் பல நபர்கள் ஏமாந்தார்கள் அதே போல் தற்போதும் ஆரம்பித்துள்ளார்கள் நீங்கள் இதை ஒரு அப்ளிகேஷன் மூலம் வாங்கிக் கொள்ள முடியும் என்றும் கூறியிருக்கிறார்கள் அந்த அப்ளிகேஷன் காண லிங்கை நான் கீழே கொடுத்துள்ளேன் அந்த அப்ளிகேஷன் என்னவென்று பார்த்துவிட்டு வந்துவிடவும் யாரும் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்பதே என்னுடைய தாழ்மையான கருத்து.

                             LINK TO DOWNLOAD:- https://swarife.com/6En0


உங்கள் ஆதரவு தேவை

    இந்த அப்ளிகேஷனை நீங்கள் பதிவிறக்கம் செய்வீர்களா? மாட்டீர்களா? என்பதே கமெண்ட்டில் எங்களுக்கு தெரியப்படுத்தலாம். மேலும் இது போல சிறந்த அப்ளிகேஷன் மற்றும் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களும் நமது இணையதளத்தில் கிடைக்கும். ஆகையால் நமது இணையதளத்தை follow செய்யவும் நன்றி.

யாரும் ஏமாற வேண்டாம் புதிய தொழில்நுட்ப திருட்டு | SAMY...




அஜித்தின் விஸ்வாசம் படம் இந்த வருடத்தின் முதல் ஹிட் படம். பாக்ஸ் ஆபிஸ் முதல் ரசிகர்கள் வரை படத்தை பற்றிய நல்ல விமர்சனங்கள் உள்ளது.
ரூ. 200 கோடியை எட்டியிருக்கும் இப்படம் எல்லா இடங்களில் ஹவுஸ் புல்லாக தான் ஓடிக் கொண்டிருக்கிறது. புது படங்கள் வந்தாலே முந்தைய படங்கள் திரையரங்குகளில் திரையிடப்படுவது நிறுத்தப்படும்.
ஆனால் விஸ்வாசம் படம் அமோகமாக ஓடிக் கொண்டிருப்பதால் 4வது வாரத்திலும் விஸ்வாசம் படத்தை பல திரையரங்குகள் திரையிட முன்வந்துள்ளனர்.

அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு ஒரு முடிவே இல்லை...

Wednesday, 30 January 2019




இதுவரை இல்லாத அளவுக்கு பேட்ட-விஸ்வாசம் மோதலால் ரஜினி-அஜித் இடையே பெரிய போட்டி நடந்தது. அதில் விஸ்வாசம் படம் தான் அதிகம் வசூல் ஈட்டி வருகிறது என கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரபல விநியோகஸ்தர் ஒருவர் இன்று நடந்த மிகமிக அவசரம் படத்தில் ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசும்போது "விஸ்வாசம் படம் பேட்டயை விட 10 கோடி அதிகம் வசூலித்துள்ளது" என கூறியுள்ளார்.
அவர் பேசிய வீடியோ அஜித் ரசிகர்கள் மத்தியில் அதிகம் தற்போது வைரலாகிறது.

பேட்ட-விஸ்வாசம் வசூல் வித்தியாசம் இத்தனை கோடியா? - பிரபல விநியோகஸ்தர் மேடையில் பேசிய வீடியோ...




அஜித்தின் நடிப்பில் உருவான விஸ்வாசம் பொங்கலுக்கு பலத்த எதிர்ப்பார்ப்புகிடையே வெளியானது. குடும்ப சென்டிமெண்ட்டால் திரையிடப்பட்ட திரையரங்கம் அனைத்தும் நிறைந்தன.
இந்நிலையில் BOFTA Film Instituteன் நிறுவனரும் தயாரிப்பாளருமான தனஞ்செயன், விஸ்வாசம் அஜித் சாருக்கு திருப்புமுனையாக அமைந்த படம்.
பில்லாவுக்கு பிறகு எத்தனையோ வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றி படம். இந்த படத்தினால் அஜித்தை அனைவரும் family family-யாக லவ் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க என பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மங்காத்தாக்கு, பிறகு எத்தனையோ வெற்றி படங்களில் நடித்திருந்தாலும் இந்த படம் அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றி படம்...

சிவா அஜித்துடன் இணைந்து ஒரு வெற்றி படத்தை கொடுத்த மகிழ்ச்சியில் உள்ளார். அஜித்தோ அடுத்த பட வேலைகளை தொடங்கிவிட்டார்.
பாலிவுட்டின் ஹிட் படமான பிங்க் படத்தின் ரீமேக்கில் தான் அஜித் நடிக்கிறார், ஷுட்டிங்கும் ஆரம்பித்துவிட்டது. பிப்ரவரி மாதத்தில் இருந்து தான் அஜித் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார்.
இப்போது ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் விஸ்வாசம் படம் உலகம் முழுவதும் ரூ. 180 கோடிக்கு  மேல் வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளன. வரும் நாட்களிலும் படத்திற்கு அதிக வரவேற்பு இருப்பதால் ரூ. 250 கோடி வசூல் வரும் என்கின்றனர் 


உலகம் முழுவதும் விஸ்வாசம் எவ்வளவு தான் வசூல்- முழு விவரம்

Tuesday, 29 January 2019




"விஸ்வாசம்" அஜித் சினிமா பயணத்தில் ஒரு மறக்க முடியாத படமாக அமைந்துள்ளது.  இதுவரை இல்லாத அளவிற்கு பிரமாண்ட வசூலை கொடுத்துள்ளது. உலகமெங்கும் வெளியான அனைத்து திரையரங்குகளும் இது தான் எங்கள் திரையரங்கில் அதிக வசூல் என்று டிவீட் போட்டு  வருகின்றனர்.
தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பிலிருந்து டிவீட் போட்டு கொண்டாடி வருவது, அடிதடி  புகை ,மது ,ஆபாசம் இப்படி தான் இருக்கும் என்று எண்ணிகொண்டிருந்த பெரியவர்கள் தாய்மார்களை அவையெல்லாம் இல்லாமல் தந்தை மகள் பாசத்தில் அனைவரையும் பிரமிக்க வைத்து குடும்ப ஆடியன்ஸை மீண்டும் மீண்டும் தியேட்டருக்கு வர வைத்த படம் விஸ்வாசம். அஜித் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது "விஸ்வாசம்" வசூல் வேட்டை. தியேட்டருக்கு குடும்பத்துடன் வந்து பார்க்கிறார்கள் என்ற விஷயம் அவரின் காதுகளுக்கும் சென்றுள்ளதே அதன் காரணம்.
அதுமட்டுமல்லாமல், ரசிகர்கள் வாழ்க்கையில் பின்பற்றும்  விதமாக நல்ல வசனங்களை இயக்குனர் சிவா  பொறுப்பாக படத்தில் வைத்துள்ளது. ரசிகர்களையும் தாண்டி அனைத்து தரப்பினரையும் சென்றடைந்தது.
இந்நிலையில் படம் வெளியாகி 18 நாட்களை கடந்துவிட்டது. இந்நிலையில் இப்படத்தின் வசூலும் அதிகரித்துள்ளது. இதனால் ரசிகர்களும், படக்குழுவும் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

வெளிநாடுகளிலும் விஸ்வாசம் படத்திற்கு நல்ல வரவேற்பு. மலேசியாவில் பெருமளவில் அஜித்திற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அவ்வப்போது நல்ல விசயங்களை சமூகத்திற்காக செய்து வருகிறார்கள். இந்நிலையில் 80 பேர் உணவு வழங்கி "விஸ்வாசம்" படத்தின் வெற்றியை கொண்டாடியுள்ளார்கள்.

மலேசியாவில் விஸ்வாசம் வெற்றி விழா!! உணவு வழங்கி கொண்டாடிய ரசிகர்கள்!!



விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் பொங்கலுக்கு வெளிவந்த படம். இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றுள்ளது. உலகம் முழுவதும் இப்படம் வசூல் சாதனை செய்ய, தமிழகத்தில் ஆல் டைம் அதிக லாபம் கொடுத்த படம் என தியேட்டர் நிறுவனம் வசூல் விவரங்களை வெளியிட்டு வருகின்றன.


அஜித் படங்கள் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுவது விஸ்வாசம் படம் தான். குடும்பங்களுக்காகவே எடுக்கப்பட்ட இப்படத்திற்கு மக்கள் அமோக ஆதரவு கொடுக்கிறார்கள். எல்லா இடத்திலும் படம் நல்ல வசூல், லாபம் தான். தமிழ்நாட்டை தாண்டி இலங்கையிலும் வசூல் வேட்டையாடி வருகிறது விஸ்வாசம் .


இலங்கையிலும் வசூல் மற்றும் மக்கள் கூட்டத்தில் "ஆல் டைம் நம்பர் ரெக்கார்ட்" செய்துள்ளதாம். அடுத்தடுத்து அங்கிருக்கும் திரையரங்க உரிமையாளர் அப்டேட் கொடுத்து வருகின்றனர். இப்போது சரஸ்வதி சினிமாஸ் "சரஸ்வதி சினிமாவில் அனைத்து சாதனைகளையும் முறியடித்து முதலிடத்தில் விஸ்வாசம் வெற்றி நடைபோடுகின்றது".

தமிழ்நாட்டை தாண்டி இலங்கையிலும் விஸ்வாசம் செய்யும் வசூல் வேட்டை... தியேட்டர் நிர்வாகம் அறிவிப்பு!!




சூப்பர்ஸ்டார் ரஜினியின் பேட்ட படம் தான் வெளிநாடுகளில் விஸ்வாசம் படத்தை விட அதிகம் வசூலித்து வந்தது. அமெரிக்காவில் விஸ்வாசத்தை விட 10 மடங்கு பேட்ட முதல் வாரத்தில் வசூலித்தது.
இந்நிலையில் தற்போது மூன்றாம் வாரத்தில் UK, ஆஸ்திரேலியா, மலேசியா போன்ற நாடுகளில் பேட்ட படத்தை பின்னுக்கு தள்ளியுள்ளது.
முழு விவரமும் இதோ..



முன்னணியில் இருந்த பேட்டயை ஓவர்டேக் செய்த விஸ்வாசம்! மூன்றாம் வார ரிப்போர்ட்..

Monday, 28 January 2019



அஜித்தின் விவேகம் படத்திற்கு பிறகு அடுத்த படம் வெளியாக ஒரு வருடமாகிவிட்டது.
காரணம் தமிழ் சினிமாவில் நடந்த ஒரு ஸ்ட்ரைக், அப்படி மட்டும் ஸ்ட்ரைக் நடக்கவில்லை என்றால் படம் விஜய்யின் சர்கார் படத்துடன் தீபாவளிக்கே வெளியாகி இருக்கும்.
பொங்கலுக்கு ரிலீஸ் ஆன இப்படம் அமோகமாக ஓடுகிறது, ரசிகர்களின் கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளனர். எந்த திரையரங்கில் எடுத்துக் கொண்டாலும் விஸ்வாசம் படம் முந்தைய படங்களின் சாதனைகளை முறியடித்துவிட்டது என்று தான் கூறுகிறார்கள்.
இப்போது Sj cinemasசிலும் சர்கார், 2.0 திரைப்பட சாதனைகளை முறியடித்து முதலில் உள்ளதாம் விஸ்வாசம். இந்த திரையரங்க உரிமையாளர் டுவிட்டர் பக்கத்தில் போட்ட பதிவு இதோ,

ரஜினியின் 2.0, விஜய்யின் சர்கார் பட சாதனைகளை வீழ்த்திய அஜித்தின் விஸ்வாசம்- மாஸ் காட்டும் தல...

FLIPKART

Lyf Water 7S (Black)

 
e-FUN&JOY © 2015 - Designed by Templateism.com